மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 295 மனுக்கள் ஏற்பு
11-Nov-2025
ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி, ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேற்று அளித்த மனுவில் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சி இரண்டாவது வார்டு கோணவாய்க்கால் என்ற இடத்தில், காளிங்கராயன் வாய்க்கால் இடது கரையை ஒட்டி, காவிரி ஆற்றங்கரை ஓரம் சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டம், சிப்காட் நீரேற்று நிலையம் அமைந்துள்ளன. இவ்விடத்தில் ஈரோடு நீரேற்று நிலையம் பகுதியில் குதிரை இறந்து ஆற்றில் மிதந்து ஒதுங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதே இடத்தில் வேறு பல கழிவு, குப்பை தேங்கியுள்ளது. குதிரை சடலம், கழிவை அப்புறப்படுத்தி, துாய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். ஆதாரத்துக்கு குதிரை இறந்து மிதக்கும் படத்தையும் இணைத்திருந்தார்.
11-Nov-2025