உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில், கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். வி.சி., மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர். மனித நேய மக்கள் கட்சி மாநகர் மாவட்ட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ