மேலும் செய்திகள்
நிலத்தகராறில் 2 பேர் கைது
01-Nov-2025
பவானி, அந்தியூரை சேர்ந்தவர் ரங்கசாமி, 48; விவசாயி. இவருக்கு அத்தாணி அருகே கரட்டூர்மேட்டில் விவசாய நிலம் உள்ளது. இந்த தோட்டம் அருகே வசிப்பவர் செம்பண்ணன், 70; இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது.இது தொடர்பாக கடந்த மாதம், 25ல் செம்பண்ணன், அவரது மனைவி சரோஜா, 65, தம்பதியரின் மகன் திவாகர், திவாகர் மனைவி ரேவதி ஆகியோர், ரங்கசாமி, அவரது மனைவியை வழிமறித்து தாக்கி, அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ரங்கசாமி, அந்தியூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார், ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் செம்பண்ணன், அவரது மனைவி சரோஜாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
01-Nov-2025