உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 வழித்தடங்களில் பஸ் இயக்கம் துவக்கிவைப்பு

3 வழித்தடங்களில் பஸ் இயக்கம் துவக்கிவைப்பு

ஈரோடு: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 3 புதிய வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர்.தமிழகத்தில், 100 புதிய பஸ் சேவையை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இதில் கோவை - ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட, 13 புதிய பஸ்களில், 10 பஸ்களின் சேவை, சென்னையில் முதல்வர் துவக்கி வைத்துள்ளார். மீதி, 3 பஸ் சேவையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். புதிதாக துவங்கப்பட்ட அந்தியூர் - கும்பகோணம் பஸ், தினமும் இரவு, 7:30 மணிக்கு அந்தியூரில் இருந்தும், காலை, 7:20 மணிக்கு கும்பகோணத்தில் இருந்தும் புறப்படும்.ஈரோடு - ராஜபாளையம் பஸ், ஈரோட்டில் இருந்து இரவு, 8:05 மணிக்கும், ராஜபாளையத்தில் இருந்து காலை, 7:30 மணிக்கும் புறப்படும். அந்தியூர் - ராமேஸ்வரம் பஸ், அந்தியூரில் இருந்து இரவு, 8:00 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம், 3:10 மணிக்கும் புறப்படும், என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி