மேலும் செய்திகள்
பு.புளியம்பட்டி சந்தையில் எகிறிய ஆடுகளின் விலை
25-Oct-2024
சந்தைக்கு வரத்து குறைவு வெற்றிலை விலை உயர்வு
04-Nov-2024
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில், 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 23,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 90,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகளும் கொண்டு வரப்பட்டன.இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள், மாடு வளர்ப்போர் மாடுகளை விற்பனைக்கு அழைத்து வரவில்லை. விவசாய பணிகள் நடப்பதாலும், மாட்டை விற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், 600க்கும் குறைவான மாடுகளே வந்தன. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதியினர், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 80 சதவீத மாடுகள் விற்றன. இவ்வாறு கூறினர்.
25-Oct-2024
04-Nov-2024