உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளரிக்காய் வரத்து அதிகரிப்பு

வெள்ளரிக்காய் வரத்து அதிகரிப்பு

ஈரோடு: ஈரோட்டில், வெயில் வாட்டி வரும் நிலையில், மார்க்கெட்டுக்கு வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஒரு வாரத்துக்கு மேலாக வெயில் வாட்டி வரும் நிலையில், பொதுமக்கள் இளநீர், பழச்சாறுகளை பருக தொடங்கியுள்ளனர். இதேபோன்று, மருத்துவ குணங்கள் நிறைந்த மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை பழம், வெள்ளரி காய்களை வாங்க தொடங்கியுள்ளனர். கரூர், கொடுமுடி பகுதி-களில் அறுவடையாகும் வெள்ளரிக்காய், ஈரோடு காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு தினமும் ஐந்து டன் வரை விற்பனைக்கு வருகிறது.ஒரு கிலோ, 40 முதல், 60 ரூபாய் வரை விற்பனையான வெள்ளரிக்காய், நுகர்வு தேவை அதிகரிப்பால், நேற்று, 100 முதல், 160 ரூபாய் வரை விற்பனையாவதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை