உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம், பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி வழங்கிய மனு:ஈரோட்டில், தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள், ஈரோட்டில் இருந்து, 5 கி.மீ.,க்கு அப்பால் சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து இயக்கப்படுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு குறுகிய கால இடைவெளியில் பஸ்கள் இல்லை.பெருந்துறை, புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பவானிசாகர் போன்ற பகுதியில் இருந்து வரும் பயணிகள், நேரடியாக சோலார் பஸ் ஸ்டாண்ட் செல்ல வசதி இல்லை. இவர்களுடன், பர்கூர், தாளவாடி, கடம்பூர் போன்ற மலைப்பகுதி மக்களும், ஈரோடு அரசு மருத்துவ-மனை, கலெக்டர் அலுவலகம், கோர்ட், கடைவீதிகள் செல்ல சிர-மப்படுகின்றனர். இதற்கு தீர்வாக ஈரோடு சுற்று பேருந்து (சர்க்-குலர் பஸ்) இயக்க வேண்டும். எண்-1 என்ற பஸ் வலது மார்க்க-மாக மத்திய பஸ் ஸ்டாண்ட், சவிதா, பி.எஸ்.பார்க், காளை மாட்டு சிலை, சோலார் பஸ் ஸ்டாண்ட், மீண்டும் காளை மாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன், ஜி.எச்., பெருந்துறை சாலை, கலெக்டர் அலுவலகம், திண்டல், நசியனுார், சித்தோடு, சூளை, வீரப்பன்சத்திரம், மத்திய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும்.பவானி, கோபி மார்க்கமாக வருவோர் சித்தோட்டில் இருந்து இந்த பஸ்ஸில் தாங்கள் செல்லும் இடம் செல்ல வசதியாகும். எண்-2 என இடது மார்க்கமாக ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட், வீரப்பன்சத்திரம், சூளை, சித்தோடு, நசியனுார், மேட்டுக்கடை, திண்டல், கலெக்டர் அலுவலகம் ஜி.எச்., - ரயில்வே ஸ்டேஷன், காளை மாட்டு சிலை, சோலார் பஸ் ஸ்டாண்ட் என இயக்க வேண்டும். கோவை உட்பட பல பெருநகரில் இதுபோன்ற சர்க்-குலர் பஸ் இயக்கப்படுவதுபோல, வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை