மேலும் செய்திகள்
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
10-Oct-2025
கிரைம் பீட்
10-Oct-2025
காரை ஓட்டி மோதிவிட்டு நடிகை எஸ்கேப்
25-Oct-2025
கோபி, கோபி அருகே கொலை செய்து, வாழை தோட்டத்தில் புதைத்த பெண் வழக்கில், சந்தேகத்தின் பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோபி அருகே கெட்டிச்செவியூர் வாழை தோட்டத்தில், ரத்தத்துடன் கூடிய கத்தி கிடப்பதாக, வந்த தகவல்படி, சிறுவலுார் போலீசார் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், அங்கு நிர்வாணமான நிலையில், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத, 40 வயதுள்ள, பெண்ணின் உடலை தோண்டி எடுத்து, அங்கேயே உடற்கூறு பரிசோதனை நடந்தது. அப்போது சேகரிக்கப்பட்ட உடல் உறுப்புகள், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து சாந்திபாளையம் வி.ஏ.ஓ., கலைச்செல்வி, 46, கொடுத்த புகார்படி, சிறுவலுார் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த பெண் அந்தியூரை சேர்ந்த, 35 வயதுள்ளவர் என தெரிய வந்துள்ளது. பெண்ணின் மொபைல்போன் எண்ணுக்கு, கடைசியாக பேசிய எண்களின் பட்டியல் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.அவ்வாறு விசாரணை செய்ததில், அதே கெட்டிச்செவியூரை சேர்ந்த, 29 வயதுடைய நபர் தான் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணை கல்லால் தலையில் தாக்கியும், கழுத்தின் அருகே தாடை பகுதியில் கத்தியால் அறுத்த காயமும் இருந்ததால், கொலை வழக்காக மாற்றம் செய்து, பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கொலையுண்ட பெண் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார், அவர் தான் அப்பெண்ணை கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
10-Oct-2025
10-Oct-2025
25-Oct-2025