பட்டாசு கடை அமைக்க அழைப்பு
ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள், தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தில் புல வரைபடம், கிரைய பத்திரம், முகவரிக்கான ஆதாரம், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவு சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-ஏஏ-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக, 600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன், அக்.,12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்கபட்டால் தற்காலிக உரிமம், நிராகரிக்கபட்டது என்றால் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளத்திலேயே பெறலாம்.