உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரகப்பா வீதியில் ரொம்ப சிரமப்பா சீக்கிரம் பணி முடிந்தால் நல்லதப்பா!

வரகப்பா வீதியில் ரொம்ப சிரமப்பா சீக்கிரம் பணி முடிந்தால் நல்லதப்பா!

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 30வது வார்டு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் வரகப்பா வீதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பு, வணிக கடை உள்ளது. இப்பகுதி சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வெளியேறி-யது. குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுநீர் அதிகளவில் வெளி-யேறி வீடு மற்றும் கடைகள் முன் தேங்கியது. இதனால் சாக்க-டையை துார் வாரி சீரமைக்க அப்பகுதியினர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடையை இணைக்கும் விதமாக சிறுபாலம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கினர். கான்கிரீட் அமைத்து இணைத்த நிலையில் மூன்று வாரமாக அடுத்தக்கட்ட பணி நடக்காமல், கிடப்பில் போட்டு விட்டனர். முன்னதாக பணி செய்வதற்காக, வீதியில் போக்குவ-ரத்து தடை செய்தனர். பணியை முடிக்காததால் அப்பகுதி மக்கள் நடந்து செல்வதே சவாலாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை