உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜல்லி கொட்டி 2 மாதமாக சாலை அமைக்கல மாநகராட்சி பாவாடை வீதியில் பரிதவிப்பு

ஜல்லி கொட்டி 2 மாதமாக சாலை அமைக்கல மாநகராட்சி பாவாடை வீதியில் பரிதவிப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட பாவாடை வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாநகரின் முக்கியமான இவ்வீதி, அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ளது. மேலும், கலைமகள் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது.பாவாடை வீதி சாலை குண்டும், குழியுமானதால், தார்ச்சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் சாலை அமைக்க, இரு மாதங்களுக்கு முன், ஜல்லி கற்கள் கொட்டினர். அதன் பிறகு சாலை அமைக்க மறந்து விட்டனர். மட்டமாக போடப்பட்ட ஜல்லி, ஒரு சில இடங்களில், தற்போது பெயர்ந்து வரத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜல்லி கொட்டிய சாலையில் தடுமாறியபடி செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள், அதுவும் பெயர்ந்து வரத் தொடங்கியுள்ளதால், சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டாவது, மேலும் காலத்தை நீட்டிக்காமல், தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ