உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக, இரு வாலிபர்கள் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் பவித்ரம் புதுார் சக்திவேல் மகன் நித்தீஸ், 21, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், நித்தீஸ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணி, 22, கூலி தொழிலாளி. ஈரோடு சோலார் பகுதியில் வசிக்கிறார். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் இவர் மீதும், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ