உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்

கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால், குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். கடந்த மாதம் கடைசி வாரம் முதல், பவானி ஆற்றில் வினாடிக்கு, 100 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வார விடுமுறையான நேற்று குறைந்த சுற்றுலா பயணிகளே வந்தனர். வினாடிக்கு, 100 கன அடி தண்ணீரே வெளியேறுவதால், அருவியில் குளிக்க வழியின்றி, பலர் பவானி ஆற்றில் குளித்து சென்றனர். சிலரோ கொட்டாத அருவியில் குளிக்க முடியாமல், ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் நேற்றும் வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ