உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணை வெறிச்

கொடிவேரி தடுப்பணை வெறிச்

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதில் குளிக்கும் வசதி எளிது என்பதால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, தினமும் ஏராள-மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மார்கழி மாதம் துவங்கியது முதல், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் கொடிவே-ரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்-டது. விடுமுறை தினமான நேற்று தடுப்பணை வழியாக தண்ணீர் அருவியாக கொட்டாததால், வந்த ஒரு சில பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் குறைந்ததால், தடுப்-பணை வளாகம் மற்றும் பரிசல்துறை வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி