உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதுவெள்ள அபாயத்தால் எச்சரிக்கைடி.என்.பாளையம், அக். 9----டி.என்.பாளையம் அருகே குன்றி மலையடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இதன் மூலம், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,500 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு, 41.75 அடி. நேற்று முன்தினம், 40.46 அடியாக நீர்மட்டம் இருந்தது.அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கடம்பூர், குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் கொட்டிய மழையால் நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை நேற்று காலை எட்டியது.இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, கொங்கர்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ