உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிவேக கார் மோதி கூலி தொழிலாளி பலி

அதிவேக கார் மோதி கூலி தொழிலாளி பலி

ஈரோடு, ஈரோடு பெரிய சேமூர் மாமரத்து பாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 49; இவர் மனைவி பரமேஸ்வரி. இருவரும் கட்டட தொழிலாளர். கடந்த, 24ம் தேதி காலை சைக்கிளில் வீரப்பன்சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை கடந்தபோது அதிவேகமாக வந்த ஸ்கோடா ரேபிட் கார், சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் சாலையில் விழுந்த செந்தில்குமார் பின்னந்லையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார், கார் டிரைவர் நவநீதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !