உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பவானி, பவானி அருகே சீதபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 60; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சுசுகி ஆக்சஸ் மொபட்டில், பவானியில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். சீதபாளையம் - பவானி சாலையில் வளைவில் திரும்பியபோது, பவானியில் இருந்து ஆப்பக்கூடல் சாலையில், தனியார் கம்பெனி பஸ் மீது மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ