உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூன்று சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் மறியலுக்கு முயற்சி

மூன்று சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் மறியலுக்கு முயற்சி

ஈரோடு: புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, வக்-கீல்கள் ஒரு பிரிவினரும், சட்டங்களை ஆதரித்து மற்றொரு பிரிவு வக்கீல்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினர். புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி ரயில் மறியல், 10ல் நடக்கும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் அறிவிப்பு வெளியானது. கோபி பார் கவுன்சில் தலைவர் காளத்திநாதன் தலைமையில், மூத்த வக்கீல் மோகன் உள்ளிட்ட பலர், நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் கூடினர்.காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு பேரணியாக நடந்து கோஷங்களை எழுப்பியவாறு ரயில் மறியல் செய்ய சென்றனர். ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வக்கீல்களை கைது செய்ய போலீசார் தயாராகினர். பின்னர், புதிய சட்டங்க-ளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர்.இதற்கிடையில், சம்பத் நகர் நீதிமன்ற பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., வக்கீல் அணி சார்பில், புதிய குற்றவியல் சட்டங்-களால், பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகளை விளக்கி, மக்க-ளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை