உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு

திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு

கோபி: கோபியில் பெரியார் திடல் எதிரே, 6.99 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, தினசரி அங்காடி கட்டட வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸில், கடந்த, 20ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் வாகனம் நிறுத்தும் தரைதளத்தில், ஆங்காங்கே கசிவுநீர் ஊற்-றெடுத்து வழிந்து ஓடுகிறது. இதை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறியதாவது: வரும் ஜன.,1ம் தேதி முதல், தினசரி அங்காடியை, வியாபாரிகள் பயன்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. கீரிப்பள்ள ஓடை பள்ளம் மற்றும் அருகேயுள்ள கிணற்று நீரால், அங்காடி வளாகத்தின் தரை தளத்தில், கசிவுநீர் ஊற்று எடுக்கிறது. கான்கிரீட் போட்டுள்ள இடைவெளி பகுதியில் இருந்து வெளியேறுகிறது. பயன்பாட்டுக்கு விடும் முன் நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி