மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு
06-May-2025
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். ஜாதிச்சான்று, ஆக்கிரமிப்பு அகற்றம், குடிநீர், சாலை வசதி என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கூட்டுறவு துறை சார்பில், தொழில் மேம்பாட்டுக்காக தனி நபர் கடனுதவியாக, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு, 7.05 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
06-May-2025