உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 141 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 67 ரூபாய் முதல் 72 ரூபாய் வரை, 59 குவிண்டால், 3.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. * புன்செய்புளியம்பட்டியில் புதன் மற்றும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. சந்தைக்கு மாடு, ஆடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்து விட்டதால், வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 6,500 ரூபாய் வரை, 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடு, 6,000 ரூபாய் வரை விலை போனது. * மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பை ஏலத்துக்கு, 140 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 225.60 - 236.09 ரூபாய், இரண்டாம் தரம், 114 - 209.89 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 3,159 கிலோ கொப்பரை தேங்காய், 6.௯௮ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், 40,000 காய்கள் வரத்தானது. கருப்பு காய் கிலோ, 65.40 - 7௪ ரூபாய், பச்சை தேங்காய், 42.89 - 64.24 ரூபாய், தண்ணீர் வற்றியது, 90.91 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 13,517 கிலோ தேங்காய், 9.௩௯ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தொடர் மழையால், மாடுகள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தன. 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று, 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 23,000 முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், முற்றிலும் கலப்பின மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் வரத்தானது. வியாபாரிகள், விவசாயிகளும் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். இதனால், 80 சதவீத மாடுகளே விற்றன.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 60 ரூபாய், நேந்திரன், 22 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 760, தேன்வாழை, 610, பூவன், 460, ரஸ்த்தாளி, 680, மொந்தன், 260, ரொபஸ்டா, 200, பச்சைநாடான், 410 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 6,060 வாழைத்தார்களும், 10.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், குறைந்த விலை (கிலோ), 226 ரூபாய், அதிகவிலை, 235 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 2,419 கிலோ தேங்காய் பருப்பு, 5.12 லட்சத்துக்கு விற்றது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 18 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 230 ரூபாய்; குறைந்தபட்சம், 190 ரூபாய்க்கும் ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை