உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

காங்கேயம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, தற்போதே நடைபயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். இரவில் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் நடைபயணம் செல்லும் பக்தர்களின் கைகளில், ஒளிரும் ஸ்டிக்கர் கட்டி விடுகின்றனர். ஒரு சிலருக்கு ஒளிரும் பட்டை வழங்கி, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை