உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்

மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்

ஈரோடு: ஈரோட்டில் மனைவி, இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலுார், நாவினிபட்டியை சேர்ந்தவர் திரு-மலை செல்வன்,35; கூலி தொழிலாளி. இவர் மனைவி சுகன்யா, 23. தம்பதிக்கு ஒமிஷா, 7, நிகில், 4, என இரு குழந்தைகள் உள்-ளனர். மதுரையில் வசித்து வந்த நிலையில், திருமலை செல்வன் தினமும் மது குடித்து விட்டு, சந்தேகப்பட்டு சுகன்யாவை துன்-புறுத்தியுள்ளார்.இதனால் ஒரு மாதத்துக்கு முன் ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதி, ஆண்டிகாட்டில் உள்ள தன் தாய் வீட்-டுக்கு குழந்தைகளுடன் சுகன்யா வந்தார். அதே பகுதியில் ஒரு சாய பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார்.இரு வாரங்களுக்கு முன் வந்த திருமலை செல்வன், குழந்தை-களை மதுரைக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் வந்தவர், சுகன்யாவிடம் தகராறு செய்து தகாத வார்த்தை பேசியுள்ளார்.அப்போது கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, சுகன்யா மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீப்பற்ற வைத்-துள்ளார். இதில் நிகிலுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்-டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்-கப்பட்டார். சுகன்யா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், திரு-மலை செல்வனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை