உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்

ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்

பவானி:எம்.டபிள்யூ.பி.சி. 16., பவானி வர்ணபுரம், மேற்கு கரை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், நேற்று ஊராட்சிக்-கோட்டை அருகே வேங்கை அம்மன் கோவில் திடலில், பொதுக்-குழு மற்றும் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்-டனர். பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, அரசு விதை பண்ணையில் சர்வே எண் 8, 9, 10, 29,30 ஆகியவற்றில் அமைந்துள்ள நீர்வழி பாதையை சரி செய்து, மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை