மேலும் செய்திகள்
ஏத்தாப்பூரில் புதிய சாலை
30-Jun-2025
ஈரோடு, வரும், 15ல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் துவக்கி வைக்கும் நிலையில், ஈரோடு, பவானி சாலை, பிளாட்டினம் மஹாலில் முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது.தமிழகத்தில் அரசு துறையின் சேவைகள், திட்டங்கள் கிராமத்தின் கடைசி பகுதியில் வசிப்போருக்கும் சென்றடைய, இத்திட்டம் துவங்குகிறது. ஈரோடு மாநகராட்சியில், 40 முகாம், பிற நகராட்சிகளில், 41 முகாம், டவுன் பஞ்.,களில், 84 முகாம், பஞ்., பகுதியில், 175 முகாம் என, 340 முகாம்கள் நடக்க உள்ளது. வரும், 15 முதல், ஆக., 14 வரை மாநகராட்சியில், 15 முகாம், நகராட்சிகளில், 15 முகாம், டவுன் பஞ்.,களில், 30 முகாம், பஞ்.,களில், 54 முகாம்கள் என, 114 முகாம் நடக்க உள்ளது. அப்போது மருத்துவ முகாம் நடக்க உள்ளது.முகாமில் வரும், 15 முதல் பெறப்படும் மனுக்களுக்கு அடுத்த, 45 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும், 15ல் பவானி சாலையில், பிளாட்டினம் மஹால், பவானி நகராட்சி வன்னியர் திருமண மண்டபம், அருச்சலுார் டவுன் பஞ்., ஓடாநிலை சமுதாய கூடம், கிளாம்பாடி டவுன் பஞ்., என பல்வேறு இடங்களில் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.அமைச்சர் முத்துசாமி நேற்று முகாம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சுஜாதா, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., சிந்துஜா, மண்டல தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் ஜெகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
30-Jun-2025