உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏரிக்கரையில் பனை விதை விதைத்த அமைச்சர்

ஏரிக்கரையில் பனை விதை விதைத்த அமைச்சர்

அந்தியூர்,ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில், 11 லட்சத்து, 25 ஆயிரம் பனை விதைகள், ஏரி, குளக்கரை உள்ளிட்ட நீர் நிலை கரைகளில் விதைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி அந்தியூர் யூனியன் கெட்டிசமுத்திரம் பஞ்., ராசாங்குளம் ஏரிக்கரையோரத்தில், பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துச்சாமி பனை விதை நட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், துாய்மை பணியாளர்கள், ௨,௦௦௦ பனை விதைகளை நட்டனர். இதில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், கலெக்டர் கந்தசாமி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி