உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

காங்கேயத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

காங்கேயம் : 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, சென்னையில் நேற்று வழங்கினார். இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 1,327 பயனாளிகளுக்கு, 6.79 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். நிகழ்சிக்கு திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சவும்யா ஆனந்த், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம் ஒன்றிய, நகர, தி.மு.க., செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி