உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அமைச்சர் ஆய்வு

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு : ஈரோடு கடைவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த இரு நாட்களாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட வந்தார். அப்போது மணிக்கூண்டு பகுதியில், சாலையோரங்களில் வியாபாரம் செய்து வந்த பெண்கள் ஒன்று கூடி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அமைச்சரிடம் முறையிட்டனர். 'கடையில் இருந்து பொருட்களை அள்ளி சென்றதாகவும், கடனில் வாங்கி வைத்திருந்த கடைக்கான அமைப்புகளை உடைத்து எடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.''உங்களுக்கு மாற்றிடம் வழங்குகிறோம். அதுவரை புதிய பொருட்களை வாங்கி சேகரிக்காமல், மாற்றிடம் வழங்கிய பின் கடை அமைத்து செயல்படுங்கள்,'' என்று அமைச்சர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை