உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி

மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி

ஈரோடு: அறச்சலுார், அ.அனுமன்பள்ளி, மாப்பிள்ளை பெரியபாளை-யத்தை சேர்ந்த முனுசாமி மனைவி பாப்பாத்தி, 67; இவர்களின் மகன் துரைராஜ், 37; தனியார் மருத்துவமனை ஊழியர். கணவர் இறந்து விட்ட நிலையில், மாப்பிள்ளை பெரிய பாளை-யத்தில் உள்ள மகள் வீட்டில் பாப்பாத்தி வசித்தார். தாயை பார்க்க மனைவி கோகிலாவுடன், துரைராஜ் சென்றார். கடந்த, 21ல் துணிகளை துரைராஜ் கம்பியில் காய போட்டபோது மின்-சாரம் தாக்கி விழுந்தார். மகனை காப்பாற்ற தொட்டு துாக்கிய பாப்பாத்தியை மின்சாரம் தாக்கியது. இதைப்பார்த்த துரைராஜின் மனைவி கோகிலா மெயின் சுவிட்சை ஆப் செய்தார். சிறிது நேரத்தில் துரைராஜ் சுதா-ரித்து எழுந்தார். ஆனால், பாப்பாத்தி மயங்கிய நிலையில் கிடந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவ பரி-சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகு-றித்து அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ