உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

பிளாஸ்டிக் கழிவுகளுக்குதீர்வு காண பேச்சுவார்த்தைஈரோடு, நவ. 23-ஈரோடு மாநகராட்சி பகுதியில், 190 முதல் 220 மெட்ரிக் டன் வரை, மக்கும், மக்காத குப்பை தினமும் சேகரிக்கப்படுகிறது. இதில், 25 முதல் 30 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவாகும்.இந்நிலையில் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில், அவற்றை சிமெண்ட் ஆலைகளுக்கு மாற்று எரிபொருளாக வழங்குவது தொடர்பாக, மாநகராட்சி பேச்சு நடத்தி வருகிறது.இதுகுறித்து நகர் நல அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவை டால்மியா, கரூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலைகளுக்கு, மாற்று எரிபொருளாக வழங்குவது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதனால் அக்கழிவுகளை எரிப்பதும் தடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை