வளைவில் கவிழ்ந்த லாரிஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயராமன், 68; ஈரோட்டில் இருந்து யூரியா மூட்டைகளை சத்தியமங்கலத்துக்கு டாரஸ் லாரியில் ஏற்றிச் சென்றார். பங்களாபுதுார் அருகே தனியார் கல்லுாரி அருகே, நேற்று மதியம் சென்றபோது, அபாயகரமான வளைவில் திரும்பியபோது, சாலையோரத்தில் லாரி கவிழ்ந்தது. ஜெயராமன் காயமின்றி தப்பினார். அதேசமயம் லாரியில் பயணித்த மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 440 மனு மீது உடனடி தீர்வுஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட, ௬௦ வார்டுகளில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில், 440 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் நடந்த. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 1,349 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 440 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொழிலாளி விபரீத முடிவுபவானி அருகே மைலம்பாடி, இருசனுார், காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் சின்னசாமி, 41; அம்மாபேட்டை அடுத்த ஜரத்தலில் குடும்பத்துடன் தங்கி, சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில், ஆராயி என்பவர் வீட்டு கூரை சட்டத்தில், சின்னச்சாமி துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். மனைவி பாக்யா புகாரின்படி, சின்னசாமி சாவுக்கான காரணம் குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மாயமானவர் சடலமாக மீட்புஈரோடு, பெருமாள்மலை, பாரதி நகர் இரண்டா-வது வீதியை சேர்ந்தவர் நடராஜ், 60; வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் சித்தோடு போலீசில் புகாரளித்தனர். இந்நிலையில் ஈரோடு அருகே பி.பெ.அக்ரஹாரத்தில், காலிங்கராயன் வாய்க்கால் கரையோர படிக்கட்டில், நடராஜ் நேற்று பிணமாக கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிந்தது. சாலை அமைக்க பூஜை பெருந்துறை பேரூராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட எட்டாவது, ஒன்பதாவது வீதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பணிகளை துவக்கி வைத்தார். கவுன்சிலர் புஷ்பா சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டர்.குடிநீர் பிரச்னையால்நசியனுாரில் மறியல்சித்தோடு அருகே நசியனுார் பேரூராட்சி, 13வது வார்டு பெரியார் நகரில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக, முறையாக வினியோகம் செய்யவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை பேரூராட்சி வாகனத்தில் குடிநீர் கொண்டு செல்ல்பட்டது. அப்போது பெரியார் நகரை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மக்கள், காலி குடங்களுடன், நசியனுார்-ஈரோடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சித்தோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண்பதாக கூறவே, 20 நிமிடங்களில் மறியல் முடிவுக்கு வந்தது.விபத்தில் சிக்கிய வேன்11 பக்தர்கள் காயம்மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு, ஒரு டிராவல்ஸ் வேன், கோவைக்கு நேற்று முன்தினம் திரும்பியது. வாகனத்தில் கோவையை சேர்ந்த விசாலாட்சி, வள்ளியம்மாள், தங்காயி என, 18 பேர் இருந்தனர். சித்தோடு அருகே சேலம்-கோவை நெடுஞ்சாலையில், பச்சப்பாளிமேடு என்ற இடத்தில், நேற்று அதிகாலை, ௫:௦௦ மணிக்கு வாகனம் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்தது. இதில் சுற்றுலா வாகன டிரைவர் உள்பட, ௧௧ பேர் காயமடைந்தனர்.குறைதீர் கூட்டத்தில்342 மனுக்கள் ஏற்புஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 342 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, வீட்டு வசதி திட்டத்தில் ஐந்து பயனாளிகளுக்கு தலா, 2 லட்சம் ரூபாய்க்கான திட்டத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.2ம் நிலை காவலர்88 பேருக்கு பயிற்சிசேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள, காவலர் பயிற்சி பள்ளியில், இரண்டாம் நிலை காவலர்களாக பயிற்சி பெற்று வரும், 88 பேர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர்.இரு குழுவாக பிரித்து, 44 பேர் ஆணைக்கல்பாளையத்தில் மாவட்ட ஆயுதப்படை பிரிவு பயிற்சிக்கும், 44 பேர் போலீஸ் ஸ்டேஷன்களில் சட்டம் ஒழுங்கு பணி பயிற்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முதல் பயிற்சி தொடங்கியது. 27 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு காவலர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.மோசடி கும்பலை விடுவித்ததாகபோலீசார் மீது குற்றச்சாட்டுகோபி, கொளப்பலுாரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஆயுள் காப்பீடு அட்டை வழங்குவதற்காக, கோபி பகுதியில் பல கிராமங்களில் அட்டைக்கு பதிவு செய்து, பெரும் தொகை பெற்றனர். இதில் ஈடுபட்ட ஐந்து பேரை பிடித்து, சிறுவலுார் போலீஸில் ஒப்படைத்தோம். மோசடி செய்ததை அவர்களும் ஒப்பு கொண்டனர்.இதற்கிடையில் ஈரோடு கலெக்டர் அலுவலக, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு நிறுவன பொறுப்பாளர் விஜயகுமார், சிறுவலுார் ஸ்டேஷனுக்கு வந்தார். அவர்களை தனக்கு தெரியாது எனக்கூறி சென்றார். அரசு மட்டுமே காப்பீடு அட்டையை வழங்கும் என தெளிவுபடுத்தினார்.ஆனால், போலீசார் அந்நபர்களை விடுவித்து விட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள், 150 பேரிடமாவது புகார் பெற்று வருமாறு கூறி எங்களை அனுப்பினர். சிலர் புகார் செய்ததற்கு சி.எஸ்.ஆர்., மட்டும் பதிவு செய்தனர். இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.பொறுப்பேற்பு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டராக அனுராதா நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றினார். இதேபோல் நீலகிரி மாவட்டம் தோவாலா இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருஞான சம்பந்தம், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.மாநகரில் சாரல் மழைஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை, 10:35 மணியளவில் சாரல் மழை பெய்தது. அரை மணி நேரம் தொடர்ந்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழைக்குப் பிறகும் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு, மாலை வரை இதமான சூழல் நிலவியது.பைனான்ஸில் திருடியபழங்குற்றவாளி கைது ஈரோடு, திரு.வி.க., வீதி நேதாஜி நகரில், ஸ்ரீஜெய் சாய்ராம் பைனான்ஸில் கடந்த, 5ம் தேதி, ௧.௪௦ லட்சம் ரூபாய் திருட்டு போனது. உரிமையாளர் ஐயப்பன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணியை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர், கூட்டம்பாளையம், ஜெ.பி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, 34, என்பவரை கைது செய்தனர். நெல்லை, அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவரான அவர் மீது திருப்பூர் அனுப்பர்பாளையம், திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்புவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வரும் மார்ச், 31ல் முடியும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர வேலைாய்ப்பு அலுவலக பதிவை, 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரியில் நேரடியாக படித்து கொண்டிருக்கக்கூடாது. முற்றிலும் வேலை இல்லாதவராக இருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில் நுட்ப பட்டம் பெற்றவர்கள் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.விண்ணப்ப படிவங்களை https://tnvelaivaaippu.gov.inஅல்லது, https://tnvelaivaaippu.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திலும் பெறலாம்.மகளிர் குழு உற்பத்தி பொருள்கண்காட்சி நாளை துவக்கம்ஈரோடு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நாளை முதல், 20ம் தேதி வரை நடக்க உள்ளது.ஈரோடு, குமலன்குட்டை, பூமாலை வணிக வளாகத்தில் நடக்கும் கண்காட்சியில் மகளிர் குழுவினர் தயாரித்த கைவினை பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலை, காட்டன் சேலை, பட்டு புடவை, துண்டு, ரெடிமேட் துணிகள், கால் மிதியடி, பேன்ஸி பொருள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய் வகை, மரச்சாமான், மூங்கில் பொருள், சிறு தானியங்கள், சிறு தானிய உணவு பொருள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் மஞ்சள், குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை இடம் பெறும். தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கும்.