உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு பென்ஷன் உயர்த்தி வழங்குதல், அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்தியூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க செயலாளர் ஜெயராமன், தலைவர் ஜெயக்குமார், துணை தலைவர் மணிமேகலை, இணை செயலாளர் கள் லலிதா, நிர்மலா, பொருளாளர் அலமேலு, செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். * நம்பியூரில் நம்பியூர் யூனியன் அலுவலகம் எதிரில், நம்பியூர் வட்டார செயலாளர் பூங்கோதை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் டி.என்.பாளையத்தில் யூனியன் அலுவலகம் எதிரில், வட்டார தலைவர் முருகன் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிருபர் குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை