உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை நகரில் ஆக்கிரமிப்பு வரும் 15ம் தேதிக்குள் அகற்ற கெடு

சென்னிமலை நகரில் ஆக்கிரமிப்பு வரும் 15ம் தேதிக்குள் அகற்ற கெடு

சென்னிமலை நகரில் ஆக்கிரமிப்புவரும் 15ம் தேதிக்குள் அகற்ற கெடுசென்னிமலை, நவ. 10-சென்னிமலை நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆகிரமிப்புதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெருந்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட மாநில சாலையான ஈரோடு, -பெருந்துறை, -காங்கேயம் சாலையில், தினசரி மார்க்கெட் முதல் உப்பிலிபாளையம் பிரிவு வரை; சென்னிமலை -டூ ஊத்துக்குளி சாலையில், சென்னிமலை முதல் மேலப்பாளையம் வரை; சென்னிமலை வடக்கு ராஜ வீதி சாலை முதல் தேர் நிறுத்தம் வரை இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து பந்தல் அமைத்தல், சிமெண்ட் அட்டை போடுதல், பெயர்ப்பலகை வைத்தல் மற்றும் வடிகால்களை மூடி சிலாப் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் வரும், 15ம் தேதிக்கு முன்பாக ஒரு வார காலத்திற்குள் தாங்களாகவே அளவீடு செய்து அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம், 15ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு அகற்றப்படும் சமயத்தில் ஏற்படும் சேதாரங்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை. இவ்வாறு நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை