உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நசியனுார் வாய்க்காலில் இறந்து கிடந்த முதியவர்

நசியனுார் வாய்க்காலில் இறந்து கிடந்த முதியவர்

பவானி :சித்தோடு அருகே நசியனுார், பள்ளத்துார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 63: இவர் இதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில், சப்ளையராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம், நசியனுாரில் அப்பத்தாள் கோவில் அருகே உள்ள வாய்க்கால் தண்ணீரில் மிதந்து வந்துள்ளார். சித்தோடு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர் கடந்த 31ம் தேதி இரவு மது குடித்து விட்டு, 10 அடி உயரமுள்ள வாய்க்கால் திண்டில் அமர்ந்து இருந்தவர், தவறி தண்ணீரில் விழுந்து இறந்துள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை