டூவீலர்கள் மோதலில் ஒருவர் பலத்த காயம்
டூவீலர்கள் மோதலில்ஒருவர் பலத்த காயம்நம்பியூர், அக். 25--நம்பியூர் அருகே கோசணம், மேட்டுப்பாளையம் சுண்டமேட்டை சேர்ந்தவர் மாரிச்சாமி, 34; நேற்று முன்தினம் இரவு, நம்பியூர்-கோபி சாலையில் மொபட்டில் சென்றார். எதிர் திசையில் நம்பியூரை சேர்ந்த குணசேகர் டூவீலரில் வந்தார்.நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், இருவரது வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் துாக்கி வீசப்பட்ட மாரிச்சாமி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.