வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை நுாலகர்கள் தான் உருவாக்க முடியும்
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில், நுாலகர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: நுாலகர்களுக்கு வாசிப்பதை ஊக்குவிக்கவும், வாசகர்களை தக்க வைத்து கொள்வது பற்றி புத்தாக்க பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுாலகர்கள்தான் வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி இளைய தலைமுறையை நுாலகத்துக்குள் வரவழைத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்களின் சராசரி வயது, 20 முதல், 25க்குள் கொண்டு வர வேண்டும். நுால் வாசிப்பதன் அவசியம், நுாலகத்தின் முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.இதில் மன நல டாக்டர் ஜெயசந்திரன், எழுத்தாளர் ஈரோடு கதிர், சண்முகசுந்தரம் உட்பட பலர் பேசினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் கருத்திருமன், இருப்பு சரி பார்ப்பு அலுவலர் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.