உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை

ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது குளிர்காற்றும் வீசி, சூழலை மேலும் இதமாக்கியது. இந்நிலையில் மதியம், 1:35 மணிக்கு மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. 45 நிமிடம் இடையூறு எதுவுமின்றி அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் பாதசாரிகள் குடைபிடித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும் சென்றனர். இதனால் மஞ்சள் மாநகரான ஈரோடு, ஊட்டி போல் மாறியது. விடுமுறை தினம் என்பதால், வீடுகளில் முடங்கிய மக்கள், காலநிலையை ரசித்து பொழுது போக்கினர்.துாறல் மழைஅந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம், நகலுார், காட்டூர், பச்சாம்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், புதுக்காடு உள்ளிட்ட பகுதி; வெள்ளித்திருப்பூர், மாத்துார், மணல்காடு, ரெட்டிபாளையம், சொக்கநாத மலையூர் பகுதிகளில், நேற்று மதியம், 1:00 மணிக்கு துவங்கிய துாறல் மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால் குளிர் அதிகரிக்க, மக்கள் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை