கீழ்பவானியில் நெல் அறுவடை துவக்கம் 6 முதல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ஈரோடு: கீழ்பவானி பாசனப்பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் வரும், 6ம் தேதி முதல் படிப்படியாக, 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2 போகத்தில் 2 லட்-சத்து, 7,000 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களும், 50,000க்கும் மேற்-பட்ட ஏக்கர் நிலங்கள் கசிவு நீர் மூலமும் பாசனம் பெறுகின்றன. தற்போது முதல் போக சாகுபடியில், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நெல், நிலக்கடலை, எள், வாழை, மரவள்ளி கிழங்கு பயிரிட்டி-ருந்தனர்.இந்த பயிர்களின் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுபற்றி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதா-வது: கீழ்பவானி பாசனப்பகுதியில் நெல் அறுவடை துவங்கிய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, கலெக்டரிடம் அனுமதி பெறப்-பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும், 6ம் தேதி ஒன்பது கொள்-முதல் நிலையம், 10ம் தேதி மீதி, 29 கொள்முதல் நிலையங்-களும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெல் அறுவடை அதிக-மாக இருந்தாலும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தாலும், கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இவ்வாறு கூறினர்.