மேலும் செய்திகள்
2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை
11-Oct-2025
கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தடப்பள்ளி வாய்க்காலின், 36வது தொலைவில், பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது. மொத்தம், 21 கி.மீ., நீளமுள்ள கூகலுார் கிளை வாய்க்கால் மூலம், 3,200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த, 24ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து கூகலுார் கிளை வாய்க்கால் உட்பட மூன்று பாசனங்களில், விவசாயிகள் நாற்றாங்கால் தயார் செய்து, ஏக்கருக்கு 30 கிலோ வரை, ஐ.ஆர்., 20, ஏ.எஸ்.டீ., 42, ஏ.டி.டீ., 38 மற்றும் 39 ரக விதை நெல் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விதைத்த நாளில் இருந்து, 25 நாட்களுக்கு பின் முளைத்த நாற்றுகளை பறித்து, நாற்றாங்காலில் நடவு செய்வர். தற்போது, 50 சதவீத விதைப்பு பணி முடிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
11-Oct-2025