மேலும் செய்திகள்
இன்று இனிதாக (திருப்பூர்)
28-Oct-2025
தாராபுரம், தாராபுரம் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், மூன்று நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில், கடந்த, ௨ம் தேதி காலை, 11:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. விடுமுறை நாளாக இருந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை, 6:45 மணி முதல், இரவு 9:30 மணி வரை மின்தடையானது. இதேபோல் நேற்றிரவு, 7:00 மணியளவில், இரு முறை மின்தடை ஏற்பட்டது. மின்தடை தொடர்வதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
28-Oct-2025