உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வெளியே வர முடியாமல் மக்கள் அவதி

மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வெளியே வர முடியாமல் மக்கள் அவதி

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் புன்செய்புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் ஊராட்சி மாதம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வீதிகளை மழை நீர் சூழ்ந்தது. இங்குள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து தெருக்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்து இரவில் தூங்க முடியவில்லை எனவும், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ