உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு புன்செய்புளியம்பட்டி மக்கள் அவதி

இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு புன்செய்புளியம்பட்டி மக்கள் அவதி

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னம்பாளையம், நல்லூர், காவிலிபாளையம்,காராப்பாடி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை செய்யப்படுகிறது.குறிப்பாக,இரவு நேரங்களில், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை, தொடர் மின்தடை செய்யப்படுகிறது. இதேபோல், பகலிலும் மின் வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும்,சுற்றுவட்டாரத்தில் உள்ள ஸ்பின்னிங் மில், பனியன் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்தை பொருத்தவரை நாங்கள் மின் நிறுத்தம் செய்வதில்லை. எல் நினோ தாக்கம் காரணமாக வெயில் அதிகமாக உள்ளது. மேலும் வெப்பம் அதிகமாக உள்ளதால் மின் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் நம்மிடம் மின் உற்பத்தி குறைவாக உள்ளது. அதை சமாளிக்கும் வகையில், ஒவ்வொரு பீடர் லைனிலும், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. வேறு எந்த பிரச்சனையும் இல்லை. மின்வெட்டு பிரச்சனை எப்பொழுது சீராகும் என உறுதியாக கூற முடியாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை