உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றத்தை விரும்பும் மக்கள் செங்கோட்டையன் சூளுரை

மாற்றத்தை விரும்பும் மக்கள் செங்கோட்டையன் சூளுரை

சத்தியமங்கலம்: -தமிழக வெற்றி கழகம் சார்பில், சத்தியமங்க-லத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் த.வெ.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: த.வெ.க., நிச்-சயம், 234 தொகுதிகளில் வெற்றி பெறும். நாளை தமிழகத்தை ஆளப்போவது த.வெ.க.,தான். மூன்றாவது தலைமுறையாக தமிழகத்தை உரு-வாக்கப் போகிற ஆற்றல் மிக்க இளைஞர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நம்மை எதிர்க்கின்ற யாராக இருந்தாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். பா.ஜ., தலைவர் நயினார், நீங்கள் டெபாசிட் கூட வாங்க முடியாது என்கிறார். அவர் எங்கிருந்து வந்தார், எங்கெங்கு போட்டியிட்டார், எல்லாம் எனக்கு தெரியும். அவர் சவால் விடு-கிறார். அவர் நிற்கிற தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 234 தொகுதிகளிலும் விஜய் நிற்பதாக நினைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகி-றார்கள். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை