உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு

பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு

ஈரோடு, பவானி புன்னம் பாறை காட்டை சேர்ந்த சரவணன், நேற்று ஈரோடு எஸ்.பி. சுஜாதாவிடம் அளித்த புகார் மனு:புன்னத்தில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில், பழைய சரவணா தியேட்டர் எதிரே, செட்டிகுட்டை வரை ௧.௫ கி.மீ., துாரம் நீளம், 10 அடி அகலம் கொண்ட பாதையை, 200 ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இதை முறைப்படி அரசுப்பாதையாக அறிவிக்க கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தோம். அளவீடு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருவர், பாதையை ஆக்கிரமித்துள்ளனர். முள், கற்களை வைத்து அடைத்துள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை