ஓட்டுப்பதிவு-ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு போலீசார் நியமனம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளையும், ஓட்டு எண்ணிக்கை, 8ம் தேதியும் நடக்கிறது. இதையொட்டி நாளை முதல் 8ம் தேதி வரை தேர்தல் பணிகளில் பணியாற்றும் போலீசா-ருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் கூறிய-தாவது: நாளை மாலை முதல் 8ம் தேதி வரை ஓட்டு எண்ணும் மையத்தில், சி.ஐ.எஸ்.எப்., 60, பட்டாலியன் போலீசார் 30, ஆயு-தப்படை போலீசார் 40, லோக்கல் போலீசார், 100 பேர் தினமும், 24 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியில் இருப்பர். ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்து செல்லும் வாகனங்கள், நபர்கள் குறித்து பதிவேடுகளில் பதிவு செய்வர். சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் இ.வி.எம்., இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையை சுற்றி துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு கூறினர்.