உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதியவர் மாயம் போலீசார் வழக்கு

முதியவர் மாயம் போலீசார் வழக்கு

ஈரோடு, விருதுநகர் மாவட்டம், வி.அமத்துார் மேற்கு வீதியை சேர்ந்தவர் ராமராஜ், 62. கடந்த, 5ல் சமையல் வேலைக்காக, புரோக்கர் சிவ பெருமாளுடன் கருங்கல்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள, புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு வந்தார். கடந்த, 6 மதியம் டாஸ்மாக் கடை எங்குள்ளது என சிவபெருமாளிடம் ராமராஜ் கேட்டுள்ளார். தனக்கு தெரியாது என கூறி விட்டு, சமையல் வேலைக்கு சென்று விட்டார். நீண்ட நேரம் கழித்து பார்த்த போது ராமராஜை காணவில்லை. இதுகுறித்து ராமராஜ் மகன் வீரராஜ், கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை