உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளைஞர் திடீர் மரணம் போலீசார் விசாரணை

இளைஞர் திடீர் மரணம் போலீசார் விசாரணை

ஈரோடு, டிச. 19-நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குச்சிப்பாளையம் விநாயகபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் தமிழரசு, 21. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஓராண்டுக்கு முன் போதை ஊசி பழக்கம் இருந்து வந்தது. கடந்த, 16ல் லக்காபுரம் லட்சுமி நகரில் உள்ள நண்பர் கோகுல் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் வீட்டில் மொபைல் போன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, தமிழரசு திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, தமிழரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவத்தனர். தமிழரசின் தந்தை பழனிசாமி கொடுத்த புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை