உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குமுறல் வீடியோ வெளியிட்டு போஸ்ட்மேன் தலைமறைவு

குமுறல் வீடியோ வெளியிட்டு போஸ்ட்மேன் தலைமறைவு

காங்கேயம், காங்கேயத்தில், 13 ஆண்டுகளாக, போஸ்ட்மேனாக வேலை பார்த்து வருபவர் ஜெயகாந்தன், 42; காங்கேயம் தாராபுரம் ரோடு, நீதிமன்றம் எதிரே குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: பதிமூன்று வருடமாக போஸ்ட்மேனாக காங்கேயத்தில் வேலை பார்த்து வருகிறேன். இரண்டு வருடமாக பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு அரியவகை குணப்படுத்த முடியாத நோய் உள்ளதால், சரிவர வேலை பார்க்க முடியவில்லை. விடுமுறை கேட்டும் அலுவலர் தர மறுக்கிறார்; சம்பளம் பிடித்தம் செய்கிறார். நான் சாகப்போகிறேன். என் உடலை என் மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள். இதற்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வீடியோவில் தெரிவித்துள்ளார். வீடியோ பரவி வரும் நிலையில், ஜெயகாந்தனும் தலைமறைவாகி விட்டார். இதனால் குடும்பத்தினர் காங்கேயம் போலீசில் புகாரளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்