உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) சுப்பாராவ் பணியாற்றி வந்தார். இவர், சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனராக (நிர்வாகம்) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக (டி.இ.ஓ.,) பணியாற்றி வந்த மான்விழி, முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், நேற்று மான்விழி ஈரோடு மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி