உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், மூன்று அல்லது நான்காவது வாரம் வெள்ளி கிழமைகளில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்மாதம் வரும், 25ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கவுள்ளது.எழுத படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு, செவிலியர், டெய்லர், கணினி இயக்குபவர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என அனைத்து வகை பணிகளுக்கும் தனியார் துறையினர் பணியமர்த்தம் செய்ய, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். கூடுதல் விபரத்துக்கு, வழிகாட்டு மையத்தை நேரில் அல்லது, 86754 12356, 94990 55942 என்ற எண், மின்னஞ்சல் முகவரி: gmail.comல் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை